டிசம்பர் மாதத்திற்குள் 17,069 மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisment

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், பொதுமக்கள், உணவக உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெங்காய விலையை கட்டுப்படுத்தும் விதமாக வெங்காய ஏற்றுமதிக்கு தடை, வெங்காயம் பதுக்கி வைப்போர் மீது கடுமையான நடவடிக்கை, வெங்காய கிடங்குகளில் சோதனை, கூட்டுறவு சங்கங்களில் சார்பில் மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காய விற்பனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இருப்பினும் வெங்காயத்தின் விலை குறையவில்லை.

onion import 17069 tons union government

Advertisment

இந்நிலையில் துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 17,069 மெட்ரிக் டன் வெங்காயம் டிசம்பர் மாத இறுதிக்குள் இறக்குமதி செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. துருக்கி நாட்டிலிருந்து 11,000 மெட்ரிக் டன் வெங்காயம், இம்மாத இறுதி (அல்லது) ஜனவரி தொடக்கத்தில் இறக்குமதி செய்யப்படும் என்று கூறியுள்ளது. மேலும் எகிப்தில் இருந்து 6,090 மெட்ரிக் டன் வெங்காயம் இம்மாத மத்தியில் இறக்குமதி என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்பிறகு உணவு விநியோக திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்தளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.