நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், நாட்டின் பல பகுதிகளில் வெங்காயம் கிலோ ரூபாய் 80-க்கு மேல் விற்பனையாகிறது. தலைநகர் டெல்லியிலும் ரூபாய் 60 முதல் ரூபாய் 80 வரை விற்கப்படுகிறது.

இந்திய மக்களின் சமையலறையில் முக்கிய இடம் பிடித்து வரும் வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வருவதால், உணவாக உரிமையாளர்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இருப்பினும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அங்காடியை அமைத்து மத்திய அரசு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்து வருகிறது. மேலும் வெங்காயம் தேவைப்படும் மாநிலங்கள் மத்திய அரசிடம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது.

ONION EXPORT STOP UNION GOVERNMENT DECISION PRICE RAISED

Advertisment

Advertisment

அதன் தொடர்ச்சியாக டெல்லி மாநில அரசு சார்பில் நடமாடும் வாகனங்கள் மற்றும் ரேசன் கடைகளில் ரூபாய் 24-க்கு வெங்காயம் விற்கப்பட்டு வருகிறது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் மாநில அரசுகள் மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை தடை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டு, விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.