ஒன் பிளஸ் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை ஹைதராபாத்தில் திறக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், ஒன் பிளஸ் சாதனங்களின் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) மற்றும் இயந்திர கற்றல் செயல்பாட்டினை மேம்படுத்துவதற்கு பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒன் பிளஸ் சாதனங்களை பயன்படுத்தும்போது எளிமையாக இருக்குமென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.