Advertisment

கல்வான் மோதல் ஏற்பட்டு ஒரு ஆண்டு நிறைவு: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இராணுவம் அஞ்சலி!

fire and fury corps

கடந்த வருடம் இதேநாளில்இந்தியா மற்றும் சீன வீரர்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் மோதல் வெடித்தது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தார்கள். இந்த மோதலில் 40க்கும் மேற்ப்பட்டசீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், நால்வர் மட்டுமே உயிரிழந்ததாகசீனா கூறியுள்ளது.

Advertisment

இந்தநிலையில், இருபதுவீரர்கள் வீரமரணமடைந்தமுதலாமாண்டு நினைவுதினத்தையொட்டி, அந்த வீரர்களுக்கு இந்திய இராணுவம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.லே-வில் உள்ள போர் நினைவுச்சின்னத்தில், எல்லையைப் பாதுகாக்கும் இராணுவப் படைப்பிரிவான'நெருப்பு மற்றும் சீற்றம்' படைப்பிரிவினர் வீரமரணமடைந்த வீரர்களின் படங்களுக்கு மலர் தூவியும், போர் நினைவுச்சின்னத்தில் மாலை அணிவித்தும் தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.

Advertisment

china India LADAK
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe