கரோனா தொற்று, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மஹாராஷ்ட்ராமாநிலத்திலும் கரோனாபரவல் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இந்தியாவிலேயே அங்குதான் தினமும் அதிகம் பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்துஅங்கு ஏற்கனவே சில பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில்நாக்பூரில் கடந்த24 மணிநேரத்தில்1,800 பேருக்கு கரோனாதொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் நாக்பூர் காவல் ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 15 முதல் 21ஆம் தேதி வரை அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இந்த ஊரடங்கின்போதுஅத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில்இன்று (11.03.2021) கரோனாதடுப்பூசியின் முதல் டோஸைஎடுத்துக்கொண்ட மஹாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்ரே, மஹாராஷ்ட்ராவின் மேலும் சில பகுதிகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "வரும் நாட்களில், சில இடங்களில் ஊரடங்கு தவிர்க்க முடியாததாக இருக்கலாம். இதுகுறித்து சில நாட்களில் நாங்கள் முடிவெடுப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.