5ஜி சேவைக்காக ஒன்-பிளஸ் நிறுவனம் குவால்காமுடன் இணைந்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்குமுன் ஒன்பிளஸ் நிறுவனம் தனது 5ஜி ப்ரோடோடைப் சாதனத்தை பார்சிலோனாவில் நடைபெற்ற உலக மொபைல் மாநாடு 2019 விழாவில் அறிமுகம் செய்தது. அப்போது குவால்காமுடன் இணைந்து உலகிற்கு மிகச்சிறப்பான 5ஜி சாதனத்தை கொண்டு வருவோம் என்று ஒன்-பிளஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
இது தவிர ஒன்-பிளஸ் 7 ஸ்மார்ட்போனில 5ஜி வசதி வழங்கப்படாது என்றும், 5ஜி சேவைக்கென புதிய சாதனம் அறிமுகமாகும் என்றும் ஒன்-பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.