புது ஃபோனை வாங்க அதிகாலை 4 மணி முதல் வரிசையில் நிற்கும் மக்கள்...!

ஸ்மார்ட் ஃபோன்களில் எத்தனையோ மாடல்கள் இருந்தாலும் அவை அனைத்தும் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை வைத்திருக்கிறது. அந்த வரிசையில் சமீபமாக ஒன் பிளஸ் (one plus) ஸ்மார்ட் ஃபோனும் இடம் பிடித்திருக்கிறது. ஒன் பிளஸ் அறிமுகமானத்திலிருந்தே அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒன் பிளஸ் ஃபோன் தனது பிராண்டின் ஒன் பிளஸ் 6டி மாடலை அறிமுகம் செய்துள்ளது.

one

இது இந்தியாவில் 9 நகரங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இதை வாங்குவதற்காக டெல்லியில் உள்ள ஒரு விற்பனையகத்தில் அதிகாலை 4 மணி முதலே மக்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். இதுவரை ஆப்பிள் ஃபோன்களை வரிசையில் காத்திருந்து மக்கள் வாங்குவதைப் பார்த்திருப்போம். ஆனால் இதை பார்க்கும்போது ஆப்பிளுக்கு போட்டியாக ஒன் பிளஸ் பிராண்ட் வந்திருக்கிறது என்றே கருதத்தோன்றுகிறது.

India Launch oneplus 6 oneplus 6t
இதையும் படியுங்கள்
Subscribe