One passed away in pondicherry beach

புதுச்சேரி, வில்லியனூர் மங்களம் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களான அய்யனார்(17), ஆஸ்வின்(17), சபரிநாதன்(17) மற்றும் ஹரீஷ்(17) ஆகிய நான்கு நண்பர்களும் சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு நேற்று மாலை சென்றுள்ளனர். இதனிடையே அய்யனார் மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் கடலில் இறங்கி குளித்த நிலையில் மீதமுள்ள சபரிநாதன் மற்றும் ஹரீஷ் ஆகியோர் கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துள்ளனர். அப்போது கடல் அலையில் சிக்கி அய்யனார், அஸ்வின் இருவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். மற்ற இருவர் தகவல் கொடுத்த நிலையில் மாயமான இருவரையும் கடலோர காவல் படையினர் மற்றும் மீனவர்கள் படகுகளில் சென்று நேற்று முதல் தேடி வந்தனர். இதில் சின்ன வீராம்பட்டினம் அடுத்துள்ள வீராம்பட்டினம் கடற்கரையில் மாயமான அய்யனாரின் உடல் இன்று கரை ஒதுங்கியது. மாயமான அஸ்வினின் உடலைத்தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Advertisment