Skip to main content

'ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு' திட்டம் அமல்படுத்தப்படும் தேதி அறிவிப்பு...

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

நாடு முழுவதும் விரைவில் 'ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை' திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு பணிகளை மேற்கொண்டு வருவதாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்தார்.

 

one nation one ration card scheme to be started from june 2020

 

 

இந்நிலையில், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், "2020-ம் ஆண்டு, ஜூன் 1-ம் தேதி முதல் ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். இந்தத் திட்டம் மூலம் வேலைக்காக வெளியூர் செல்லும் தொழிலாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், பணிநிமித்தமாக அடிக்கடி தங்கள் இடத்தை மாற்றும் ஊழியர்கள் அதிகமானோர் பயன் பெறுவார்கள்.

இந்தத் திட்டம் அமலுக்கு வந்த பின் நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் தங்களுக்கு உரிய உணவு பொருட்களை யார் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். பயனாளிகளின் அடையாளத்தைக் கண்டுபிடிக்க ஒவ்வொரு கடையிலும் ஆதார் மூலம் அடையாள அட்டையும், பயோமெட்ரிக் முறையும் பயன்படுத்தப்படும். இதற்காக அனைத்துக் கடைகளும் ஆன்லைன் மூலம் இணைக்கப்படும்" என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈழப் பிரச்சனை முதல் ரத யாத்திரை வரை..! ராம்விலாஸ் பாஸ்வான் சிறப்பு பேட்டி...

    இந்திய அரசியலில் மிகமுக்கியமான தலைவர்களில் ஒருவராகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகத் தனது வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்த ஒருவராகவும் பார்க்கப்படுபவர் ராம்விலாஸ் பாஸ்வான். 60 களின் மத்தியில் தனது அரசியல் பயணத்தைத் துவங்கிய பாஸ்வான், வெகு விரைவிலேயே தேசிய அரசியலில் தவிர்க்கமு...
Read Full Article / மேலும் படிக்க,
Open in app

Next Story

"உயிருடன் இருந்தபோது பார்க்கவில்லை, இப்போது அரசியல் செய்கிறார்கள்" - சிராக் பஸ்வான் சாடல்...

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

Chirag Paswan on HAM's letter to PM demanding a probe into his father's demise

 

ராம்விலாஸ் பஸ்வான் நோயுற்றிருந்தபோது அவரை நேரில் வந்து பார்க்காதவர்கள் தற்போது அவர் இறந்த பிறகு இறப்பை வைத்து அரசியல் செய்கின்றனர் என சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார். 

 

மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த மாதம் காலமானார். டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் ராம்விலாஸ் பஸ்வான் சிகிச்சை பலனின்றி காலமானார். பீகார் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இவரின் இறப்பு அங்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ராம்விலாஸ் பஸ்வான் இறப்பில் அவரது மகன் சிராக் பஸ்வான் மீது சந்தேகம் எழுந்துள்ளதால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி தலைவர் ஜிதேன் ராம் மன்ஜி, பிரதமருக்குக் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.  "ராம்விலாஸ் பஸ்வான் மரணத்தில் அவரது மகன் சிராக் பாஸ்வானை கேள்விக்குள்ளாக்கும் பல சந்தேகங்கள் உள்ளன. எனவே இதுகுறித்து தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும்" என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள சிராக் பஸ்வான், "ஒரு மகனைப் பற்றி இதுபோன்ற விஷயங்களைப் பேசுபவர்கள் தங்களைப் பற்றி வெட்கப்பட வேண்டும். தொலைபேசியில் என் தந்தையின் உடல்நிலை குறித்து மன்ஜி அவர்களிடம் சொல்லியிருக்கிறேன், ஆனாலும் அவர் ஒருபோதும் என் நோயுற்ற தந்தையைப் பார்க்க வரவில்லை. மன்ஜி இப்போது என் தந்தையைப் பற்றி அக்கறையாக இருப்பதுபோல பேசுகிறார். ஆனால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது ஏன் அவரைப் பற்றி இவ்வளவு அக்கறை காட்டவில்லை? எல்லோரும் இப்போது இறந்த என் தந்தையை வைத்து அரசியல் விளையாட்டு விளையாடுகிறார்கள், அவர் உயிருடன் இருந்தபோது அவரைப் பற்றி யாரும் ஏன் கவலைப்படவில்லை?" என கேள்வியெழுப்பியுள்ளார்.