Advertisment

மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்களின் பெயர்; ஒரே நாடு ஒரே உரம் என்னும் புதிய திட்டம் 

'One Nation One Fertilizer'; a new scheme is coming

டிஎபி, யூரியா உட்பட மானிய விலையில் வழங்கப்படும் அனைத்து உரங்களும் 'ஒரே நாடு ஒரே உரம்' என்ற மத்திய அரசின் புதிய திட்டத்தின் கீழ் பாரத் என்ற பெயரில் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

'ஒரே நாடு ஒரே உரம்' திட்டத்தை மத்திய ரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சூக்ஹ் மாண்டவியா அறிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறுகையில், இந்த திட்டம் முதலில் யூரியாவில் இருந்து துவங்கும் எனவும் பின் அனைத்து உரங்களும் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும்நடைமுறை போக்குவரத்து செலவுகளை குறைக்கும் எனவும் விவசாயிகளுக்கு உரங்கள் வருடம் முழுதும் கிடைக்க வழிவகை செய்யும் எனவும் கூறியுள்ளார். உர தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் உரப்பைகளில் மூன்றில் ஒரு பங்கு தங்கள் நிறுவனங்களின் பெயர்களை போட்டுக்கொள்ளலாம் எனவும் எஞ்சிய இரண்டு பங்கு இடங்களில் பாரத் என்ற பெயர் அச்சிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

India
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe