ADVERTISEMENT

நிரவ் மோடி மீது அமலாக்குத்துறை குற்றப்பத்திரிகை பதிவு...!

01:24 PM Mar 12, 2019 | tarivazhagan

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய உறவினர் மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்து, இந்தியாவைவிட்டு வெளியேறினர். சில தினங்களுக்குமுன் லண்டனை சேர்ந்த டெலிகிராப் பத்திரிகையாளர் நிரவ் மோடி சாலையில் நடந்து செல்லும்போது அவரை இடைமறித்து பேசிய வீடியோ வைரலானது. அப்போது அவர் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும் அதே பகுதியில் உள்ள ஒரு பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 74 கோடி மதிப்புள்ள ஒரு வீட்டில் அவர் வாழ்ந்து வருவதாகவும் அந்த பத்திரிகையாளர் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT


இந்நிலையில் நீரவ் மோடி மீது அமலாக்கத்துறை மேலும் ஒரு குற்றப்பத்திரிகையை பதிவு செய்துள்ளது. அந்நியச் செலாவணி மோசடி குற்ற வழக்கின் பின்னணியில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவுசெய்துள்ள குற்றப்பத்திரிகையுடன் இணைப்பாக நீரவ் மோடி மற்றும் சிலர் மீது இக்குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குக்கு வலு சேர்க்கும் வகையிலான ஆவணங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இங்கிலாந்தில் தலைமறைவாக வாழ்ந்துவரும் நிரவ் மோடியை இந்தியா கொண்டுவருவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

நீரவ் மோடி மீதான முதலாவது குற்றப்பத்திரிகை கடந்த ஆண்டு மே 9-ம் தேதி பதிவு செய்யப்பட்டது. அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ. ஆகிய இரண்டும் சேர்ந்து நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதுவரையில் நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ. 1,873.08 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT