Skip to main content

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் ஒரு லட்சம் டன் வெங்காயம்!

Published on 27/10/2020 | Edited on 27/10/2020
One lakh tonnes of onions are imported from abroad

 

 

கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், வெங்காய தட்டுப்பாட்டு நிலை மற்றும் விலையுயர்வை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக மத்திய அரசு நிறுவனமான எம்.எம்.டி.சி. மூலம் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொட்டைப் பாக்கு கடத்தல்;ஒருவர் கைது

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

thoothukudi incident; import export

 

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த கண்டெய்னர்கள் பெட்டியைப் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தினர். அதில் 'பஞ்சு கந்தல்' என்ற பெயரில் மோசடியாக ஆவணங்கள் தயாரித்து கப்பல் மூலமாக இந்தோனேசியாவிலிருந்து கொட்டைப் பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

 

இந்த சம்பவத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷிப்பிங் நிறுவன உரிமையாளர் ரவி பகதூர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்த் துறைமுகம் வழியாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு கண்டெய்னர் பெட்டிகள் வந்து இறங்கியது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில் கொட்டைப் பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 65 டன் கொட்டைப் பாக்குகளின் மதிப்பு 4 கோடி ரூபாய் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில் அது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

 

Next Story

கேட்டாலே கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை - பாமக ராமதாஸ் குற்றச்சாட்டு 

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

'Onion price that makes you cry'- Pmk Ramadoss alleges



வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.75 என்ற உச்சத்தை அடைந்திருக்கிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும்; ஆனால், இப்போது வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்ணீர் வரும் அளவுக்கு விலை அதிகரித்து விட்டதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர்.

 

கடந்த வாரம் வரை ஒரு கிலோ ரூ.25 - 30 என்ற அளவில் இருந்த பெரிய வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களில் தான் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. வெங்காயம் அதிகம் விளையும் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு காரணங்களால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

 

அடுத்த சில நாட்களில் தீப ஒளித் திருநாள் உள்ளிட்ட திருவிழாக்கள் வரவிருக்கும் நிலையில், வெங்காயத்தின் விலை மேலும், மேலும் உயருவதற்கு வாய்ப்பிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் தக்காளி விலை கிலோ ரூ. 200-ஐ தாண்டியதைப் போன்று  வெங்காயத்தின் விலையும் கிலோ ரூ. 150-ஐத் தாண்டும் வாய்ப்புகள் உள்ளன. இந்த விலை உயர்வில் இருந்து மக்களைக் காக்கும் மாபெரும் கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.

 

bb

 

வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் முதல் பணியாகச் சென்னை உட்படத் தமிழ்நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை சந்தைகளுக்குக் கொண்டு வருவதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களில் இருந்து கூட்டுறவுத்துறை நிறுவனங்கள் மூலமாக வெங்காயத்தை மொத்த விலையில் கொள்முதல் செய்து பண்ணைப் பசுமைக் கடைகள், நியாயவிலைக் கடைகள் ஆகியவற்றின் மூலம் மலிவு விலையில் விற்பனை செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

நாடு முழுவதும்  வெங்காயத்தின்  விலை அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள வெங்காயம் முழுவதையும் சந்தைக்கு அனுப்ப வேண்டும். இந்தியாவிலிருந்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதுடன்,  வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகளையும் மத்திய அரசு ஆராய வேண்டும்.

 

வெங்காயத்தின் விலை நிலையில்லாமல் எட்ட முடியாத உயரத்திற்கு அதிகரிப்பதற்கும், அதலபாதாளத்திற்குத் தாழ்வதற்குக் காரணம் அதற்கான விலை நிர்ணயிக்கப்படாதது தான். எனவே, தேசிய அளவில் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து, விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.