Published on 27/10/2020 | Edited on 27/10/2020

கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், வெங்காய தட்டுப்பாட்டு நிலை மற்றும் விலையுயர்வை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக மத்திய அரசு நிறுவனமான எம்.எம்.டி.சி. மூலம் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.