Advertisment

''ஒரே பூமி; ஒரே குடும்பம்'' - மத்திய அமைச்சர்கள் கூட்டாக பேட்டி

Advertisment

டெல்லியில் இன்றும், நாளையும் என இரு நாட்கள் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த சர்வதேச தலைவர்களுக்குப் புகழ்பெற்ற கோனார்க் சக்கரம் பின்னணியில் இருக்கும்படி சிவப்புக் கம்பளத்தில் நின்று பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு அளித்தார். அதேபோன்று பிரகதி மைதானத்தின் முன்பு தமிழகத்தின் 27 அடி உயர நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

மொரோக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஜி 20 மாநாட்டில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் நாட்டின் பெயரைக் குறிக்க பிரதமர் மோடியின் முன்பாக வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் இந்தியா என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என இடம்பெற்றது.

Advertisment

இந்த ஜி 20 மாநாட்டில் கூட்டறிக்கைக்கு உலக தலைவர்கள் ஒப்புதல் அளித்த நிலையில் மாநாட்டின் தீர்மானம் தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் ஆகிய மத்திய அமைச்சர்கள் கூட்டாக பேட்டியளித்தனர். 'ஒரே பூமி;ஒரே குடும்பம்; ஒரே எதிர்காலத்தைப் பகிர்ந்து கொள்வோம் என்பதே ஜி-20 தலைமையின் தகவல். வலுவான நிலையான சமநிலையை உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்த ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்தியா தலைமைக்கு கீழ் ஆப்பிரிக்க யூனியன் ஜி 20 அமைப்பின் நிரந்தர உறுப்பினரானது மகிழ்ச்சியளிக்கிறது. உலகளாவிய பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் யாரும் பின்தங்கியிருக்கக் கூடாது' என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதேபோல் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், சர்வதேச நிதி அமைப்புகளை சீரமைக்க ஜி 20 தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe