Advertisment

"ஒமிக்ரான் வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது" - ஆய்வில் தகவல்!

jkl

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 'ஒமிக்ரான்' எனும் புதிய வகை கரோனா தற்போது உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில்ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ளன. இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Advertisment

இருந்தும் இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பரவியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே, கர்நாடகாவில் 2 பேருக்கும், மஹாராஷ்ட்ரா - 10, குஜராத் - 1, டெல்லி - 1, ராஜஸ்தான் - 9 என இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உள்ளது. இந்நிலையில், இந்தத் தொற்று தொடர்பாக தென்னாப்பிரிக்க ஆராய்ச்சி கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "ஒமிக்ரான் தொற்று எதிர்பார்க்கும் அளவுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. உயிரிழப்பு எண்ணிக்கையும் மிக மிக குறைவாக இருக்கும். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் நிலைமை மாறலாம்" என்று தெரிவித்துள்ளது.

Advertisment

OMICRON
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe