Skip to main content

அண்டை மாநிலத்தில் 'ஒமிக்ரான்' உறுதி!

Published on 12/12/2021 | Edited on 12/12/2021

 

'Omigron' in neighboring state

 

கடந்த இரண்டு வருடங்களாகவே உலக அளவில் மிகப் பெரும் பேசுபொருளாக இருக்கிறது கரோனா. தற்போது வரை உலக நாடுகள் கரோனா பாதிப்புக்கு எதிராகத் தடுப்பூசிகளை செலுத்தி போராடிவருகிறது. தற்போது புதிதாக 'ஒமிக்ரான்' என்ற வைரஸ் பரவலால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

 

'ஒமிக்ரான்' தொற்று பாதிப்பு காரணமாக மும்பையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 35 பேருக்கு 'ஒமிக்ரான்' கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தில்தான் 'ஒமிக்ரான்' பாதிப்பு என்பது மிகவும் அதிகமாக உள்ளது. இதுவரை 17 பேருக்கு அங்கு 'ஒமிக்ரான்' உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் ஒருவருக்கு 'ஒமைக்ரான்' தொற்று ஏற்பட்டதாகவும் பின்னர் அவர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்து விட்டதாகவும் ஆந்திர சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அயர்லாந்திலிருந்து மும்பை வழியாக விசாகப்பட்டினம் வந்த  34 வயது நபருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்; கேபிள் ஆபரேட்டருக்கு போலீஸ் வலை

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
The old woman who was alone at home was brutalized; Police net for cable operator

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை துண்டால் நெரித்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் கேபிள் ஆபரேட்டரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திராவில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் கௌரவ பள்ளம் பூங்கா அருகே வசித்து வருபவர் மூதாட்டி லட்சுமி. இவர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில், கேபிள் டிவி ஆபரேட்டர் கோவிந்த் நல்ல முறையில் பழகி வந்துள்ளார். வீட்டில் மூதாட்டி லட்சுமி மட்டும் தனியாக இருப்பதை அறிந்த கோவிந்த் அடிக்கடி வீட்டுக்கு வந்து உதவிகளை செய்வது போல் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென வீட்டுக்கு வந்த கேபிள் ஆபரேட்டர் கோவிந்த், சோபாவில் மூதாட்டி அமர்ந்திருந்தபோது பின்புறமாகச் சென்று கையில் இருந்த துண்டால் கழுத்தை நெருக்கியுள்ளார். மூதாட்டி கத்திக் கூச்சலிட முயன்றும் விடாமல் நெருக்கமாகக் கழுத்தை நெருக்கியுள்ளார். இதில் மூதாட்டி மயக்கம் அடைந்தார். ஆனால் மூதாட்டி இறந்து விட்டதாக நினைத்த கோவிந்த், அவரிடம் இருந்த பத்து சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

மயக்கம் தெளிந்த மூதாட்டி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் கேபிள் ஆபரேட்டர் மூதாட்டியின் கழுத்தை நெரிக்கும் அந்த பரபரப்பு காட்சிகள் இடம் பெற்ற நிலையில், அதை ஆதாரமாக வைத்து கேபிள் ஆபரேட்டர் கோவிந்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

காந்தாரா பாணியில் நடனமாட முயன்று தீ விபத்து

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

Fire while trying to dance in Gandhara style

 

அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற காந்தாரா திரைப்பட பாணியில் நடனம் ஆடியவர்கள் தீயில் சிக்கிக் கொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் எரகுண்ட்லா பகுதியில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. அப்பொழுது நடன நிகழ்ச்சிகளுக்கும் விழக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது காந்தாரா திரைப்படத்தில் வரும் பஞ்சுருளி வேடம் அணிந்த இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். தொடர்ந்து காந்தாரா படத்தில் வருவதைப் போலவே நெருப்பிற்கு நடுவே நடனமாட ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அவர்களை சுற்றி நாலாபுறமும் வட்டமாக பெட்ரோல் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டது. அப்பொழுது திடீரென எரிந்து கொண்டிருந்த தீயானது நடனமாடியவர்களின் உடைகளை பற்றி எரிய ஆரம்பித்தது. நடனம் ஆடியவர்கள் மட்டுமல்லாது சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்களும் தீயில் விழுந்தனர். இந்த விபத்தில் தீக்காயமடைந்த எட்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.