'Omigron' exposure rises to 578 in India!

Advertisment

இந்தியாவில் 'ஒமிக்ரான்' வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 142, மகாராஷ்டிராவில் 141, கேரளாவில் 57, குஜராத்தில் 49, ராஜஸ்தானில் 43, தெலங்கானாவில் 41, தமிழ்நாட்டில் 34, கர்நாடகாவில் 31 பேருக்கு 'ஒமிக்ரான்' பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 'ஒமிக்ரான்' வகை கரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கையும் 17-லிருந்து 19ஆக அதிகரித்துள்ளது. 151 பேர் குணமடைந்த நிலையில், 427 பேர்'ஒமிக்ரான்' காரணமாக சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.