Skip to main content

" கரோனா வைரஸ் விட ஒமிக்ரான் மூன்று மடங்கு வேகமாக பரவக்கூடும்.." - சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன்

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

o

 

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 'ஒமிக்ரான்' எனும் புதிய வகை கரோனா தற்போது உலகில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 75- க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த நிலையில், 'ஒமிக்ரான்' தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ளன. இந்தியாவில் ஏற்கனவே, கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

தமிழகத்தில் ஒமிக்ரான் அறிகுறியோடு வந்த நைஜீரியைவைச் சேர்ந்த சிலரின் மாதிரிகள் பெங்களூருக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் அதில் ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில்,ஒமிக்ரான் பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மாநிலங்களுக்கும்  கடிதம் அனுப்பியுள்ளார். அதில், " மற்ற வகை கொரோனா வைரஸ் விட ஒமிக்ரான் மூன்று மடங்கு வேகமாக பரவக்கூடும்; அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்புகளை தீவிரமாக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்