Advertisment

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஒமிக்ரான் - புதிதாக 6 பேருக்கு தொற்று உறுதி!

ghj

Advertisment

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 'ஒமிக்ரான்' எனும் புதிய வகை கரோனா தற்போது உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ளன. இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில், வெளிநாட்டு விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் தற்போது ஜனவரி மாதம்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வட மாநிலங்களில் கரோனா தொற்று கடந்த இரண்டு தினங்களாக அதிகரித்துவருகிறது. மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை சீராக அதிகரித்துவருகிறது. தற்போது ஆந்திரா, கேரளாவிலும் இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தொற்று எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி ராஜஸ்தானில் 4 பேருக்கும், மஹாராஷ்ட்ராவில் 2 பேருக்கும் இந்த தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று எண்ணிக்கை நேற்று (13.12.2021) ஒரேநாளில் 38ல் இருந்து 44ஆக அதிகரித்துள்ளது. இதனால் மாநில அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Maharashtra OMICRON Rajasthan
இதையும் படியுங்கள்
Subscribe