
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல் இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இரவு 11.00 மணி முதல் அதிகாலை 05.00 மணி வரை இரவுநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. திருமண நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று (25/12/2021) முதல் ஜனவரி 2ஆம் தேதிவரை பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் ஒரே இடத்தில் அதிக அளவு மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்படுவதாக ஒடிஷா அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் டிசம்பர் 28ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. கர்நாடகாவில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. திரையரங்குகள், உணவகம், திருமண நிகழ்ச்சிகளுக்கு 50% பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)