In the old plastic warehouse incident police investigation

Advertisment

புதுச்சேரி மாநிலம், லாஸ்பேட்டை கொக்கு பார்க் பகுதியைச் சார்ந்தவர் கார்த்திகேயன். இவர் புதுச்சேரி குறிஞ்சி நகர் அருகே உள்ள வசந்தபுரம் பகுதியில் பழைய ப்ளாஸ்டிக் கிடங்கு வைத்துள்ளார். இந்த கிடங்கில் பழைய ஒயர், டயர்கள், ப்ளாஸ்டிக் பொருட்களைக் கடந்த மூன்று வருடமாகச் சேமித்து விற்பனை செய்து வருகின்றார்.

இந்நிலையில் இன்று (06/02/2021) மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த ப்ளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. தீயானது அதிகளவு ஏற்பட்டதால், புகை அந்தப் பகுதி முழுவதும் சூழ்ந்தது. இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். அதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மூன்று தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

தீயில் எரிந்த பொருட்களின் சேதம் 5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.