Advertisment

பற்றி எரியும் தீயில் உயிரை மாய்த்துக்கொண்ட முதியவர்

old man who jumped into the fire

Advertisment

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்(68). வயது மூப்பின் காரணமாக பல்வேறு உடல் நோய் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அதன் காரணமாக வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்திருக்கிறார். இதன் காரணமாக விஜயகுமார் மன உளைச்சலில் இருந்தாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஜயகுமார் புதூர் கிராமத்தில் அமைந்துள்ள தனது குடும்ப வீட்டிற்கு சென்று இரவு நேரத்தில் தீ மூட்டி அந்த தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். வீட்டின் அருகே தீ பற்றி எரிந்ததை பார்த்துஅதிர்ச்சியடைந்த விஜயகுமாரின்சகோதரி விஜயகுமாரி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தார். அதன்பிறகு தீ அணைந்துவிட்டது என்று வீட்டிற்கு சென்றுவிட்டனர். ஆனால், மறுநாள் காலையில் தீ பற்றி எரிந்த இடத்தை வந்து பார்த்த விஜயகுமாரிதனது சகோதரர் கருகிய நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஜயகுமார் உடலைக் கைபற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மேலும், அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வயது மூப்பின் காரணமாக தனது உடலுக்கு தானே தீ வைத்துக்கொண்டு முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe