நாயின் தாகத்தை போக்க வெறும் கைகளால் தண்ணீர் பிடித்து கொடுத்த முதியரின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. வனத்துறை அதிகாரியான சுசாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விலங்குகள் தொடர்பாக அடிக்கடி வீடியோ பதிவிடுவார். தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் நாய் ஒன்று முதியவரை பார்த்துகொண்டு நிற்கிறது.

Advertisment

Advertisment

அதற்கு தாகம் எடுத்துள்ளதை உணர்ந்த அந்த முதியவர் அருகில் இருந்த தொட்டியில் இருந்து தன் கைகளை கொண்டு தண்ணீர் எடுத்து அந்த நாய்க்கு கொடுக்கின்றார். முதியவரின் இந்த அன்பை தற்போது இணையதளங்களில் அனைவரும் பாராட்டி வருகிறார்கள். உதவுவதற்கு வயது ஒரு தடையில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த வீடியோ தற்போது அனைவராலும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.