மின்சாரக் கம்பி மீது விழுந்த கைக்குட்டையை எடுக்க முயன்று உயிரிழந்த முதியவர்

 An old man died trying to pick up a handkerchief that fell on an electric wire

மின்கம்பி மீது விழுந்த கைக்குட்டையை எடுக்க முயன்ற முதியவர் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம்உதயகிரியில் உள்ள ஹாசன் நகர் பகுதியில் வசித்து வருபவர் மல்லப்பா. அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்த மல்லப்பா வீட்டின் முன்புறம் உள்ள மின் கம்பியின் மீது தெரியாமல் விழுந்த கைக்குட்டையை ஒட்டடைக் குச்சியைக் கொண்டு எடுக்க முயன்றுள்ளார். அப்பொழுது மின்சாரம் பாய்ந்து மல்லப்பா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் மின்கம்பி மேல் விழுந்த கைக்குட்டையை எடுக்கமுயன்ற முதியவர் மின்சாரம் தாக்கி தீப்பிழம்பு வெடிக்கக் கீழே விழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

electicity incident karnataka
இதையும் படியுங்கள்
Subscribe