Skip to main content

நீரஜ் சோப்ராவின் இல்லத்தில் ஆடல், பாடலுடன் வெற்றியைக் கொண்டாடிய மூதாட்டி! 

Published on 24/07/2022 | Edited on 24/07/2022

 

Old lady celebrates success with dance, song at Neeraj Chopra's house!

 

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றதையடுத்து, அவரது இல்லத்தில் ஆட்டம், பாட்டம் அரங்கேறியது. 

 

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் வெள்ளி பதக்கம் வென்றார். இதையடுத்து, நீரஜ் சோப்ராவின் சொந்த ஊரான பானிபட் பகுதியில் உள்ள அவரது வீட்டில் தொலைக்காட்சியில் போட்டியைக் கண்ட பெண்கள் ஆடி, பாடி வெற்றியைக் கொண்டாடினர். அப்போது, மூதாட்டியின் உற்சாக நடனம் அனைவரையும் கவர்ந்தது. இது குறித்த காணொளி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

இதனிடையே, பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் ரயிலில் திருமணம்; வைரலாகும் வீடியோ

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

 Marriage on a Running Train; A viral video

 

அண்மையாகவே திருமணம் செய்த கையோடு தேர்வு எழுதுவது அல்லது போராட்ட நிகழ்வுகளுக்கு திருமணம் முடிந்த கையோடு செல்வது என சில புதுமண தம்பதிகள் எடுக்கும் அதிரடி முடிவுகள் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாவதும், அந்த காட்சிகள் இணையவாசிகள் மத்தியில் ஆதரவுகளை பெறுவதும், எதிர்ப்புகளையும் பெறுவதும் நிகழ்ந்து வருகிறது. ஆனால் அதற்கெல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் ஓடும் ரயிலில், பயணிகள் மத்தியில் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணிற்கு மாலையிட்டு, தாலிகட்டி திருமணம் செய்து கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அசன்சோல் ரயிலில் திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“எப்போதுமே தனிமை.. யாரும் என்னுடன் விளையாட மாட்டார்கள்” - கண்கலங்க வைத்த சிறுவன்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

The south korea boy  says Always lonely.. no one will play with me

 

தென் கொரியாவில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘மை கோல்டன் கிட்ஸ்’ என்ற நிகழ்ச்சி அந்த நாட்டில் மிகவும் பிரபலமானது. இதில் கடந்த 21ஆம் தேதி அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பான எபிசோட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 4 வயது சிறுவனான கியூம் ஜி-யூன் என்ற சிறுவன் கண்கலங்கி பேசும் வீடியோ பார்ப்போரை மனம் நெகிழ வைத்திருக்கிறது. 

 

‘மை கோல்டன் கிட்ஸ்’ நிகழ்ச்சி பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பு குறித்து வல்லுநர்களிடம் ஆலோசனை பெறும் நிகழ்ச்சி ஆகும். அதில் பங்கேற்ற சிறுவன் கியூம் ஜி-யூன் தான் தனிமையில் தவிப்பதாக கூறினார். இது தொடர்பான வீடியோ உலகம் முழுவதும் பரவி கண்கலங்க வைத்துள்ளது.

 

அந்த வீடியோவில் கியூம் ஜி-யூனிடம், ‘உனக்கு அப்பா, அம்மா இருவர்களில் யாரை ரொம்ப பிடிக்கும்’ என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்கிறார். அதற்கு பதில் அளித்த கியூம், “எனக்கு தெரியவில்லை. எப்போதுமே வீட்டில் நான் மட்டும் தான் தனியாக இருப்பேன். என்னுடன் யாரும் விளையாட மாட்டார்கள். எனது தந்தை எப்போதுமே என்னிடம் அச்சுறுத்தும் வகையில் தான் நடந்து கொள்வார். அவர் என்னிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.

 

மேலும், அந்த சிறுவனிடம் தாய் குறித்து கேட்கும் போது, கண்ணீர் சிந்தியபடி, “அவருக்கு என்னை பிடிக்கவில்லை என நினைக்கிறேன்” என்று கூறிக்கொண்டு அழுகிறார். அதன் பின்பு தன்னை தானே சமாதானப் படுத்திக்கொண்டு மீண்டும் பேசிய அவர், “நான் சொல்வதை என் அம்மா எப்போதுமே கேட்க மாட்டார். அவருடன் நான் விளையாட வேண்டும் என ஆசை இருக்கிறது. ஆனால், எப்போதுமே என்னை திட்டிக்கொண்டே இருப்பார்” என்று கூறினார் அந்த சிறுவன். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்