அன்னதானத்துக்கு 8 லட்சம் வழங்கிய பிச்சைக்காரர்!

ஆந்திராவில் முதியவர் ஒருவர் பிச்சை எடுத்த பணத்தில் 8 லட்சம் நன்கொடை வழங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் காரியப்பன். இவர் அப்பகுதியில் 40 ஆண்டுக்காலமாக ஆட்டோ ரிக்ஷா ஓட்டிவந்துள்ளார். தற்போது 75 வயது ஆன நிலையில், வயது முதிர்வின் காரணமாக பிச்சை எடுக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சாய்பாபா கோயிலில் அன்னதான திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக அப்பகுதி இளைஞர்கள் அந்த பகுதி மக்களிடம் நிதி வசூல் செய்து வந்தார்கள். அப்போது காரியப்பனை கடந்து சென்ற இளைஞர்களை கூப்பிட்ட அவர், ஏன் என்னிடம் பணம் கேட்கவில்லை என்று கேட்டுள்ளார், அதற்கு நீங்களே கஷ்டப்படுகிறீர்கள், உங்களிடம் எப்படி கேட்பது என்று இளைஞர்கள் பதிலளித்துள்ளார்கள். ஆனால் சிரித்தவாறே என்னிடம் பணம் இருக்கிறது என்று கூறிய அவர், பையில் வைத்திருந்த 8 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIRAL
இதையும் படியுங்கள்
Subscribe