Advertisment

கரோனா எதிரொலி; ஓலா நிறுவனத்தின் மிகப்பெரிய லே ஆஃப்...

Advertisment

ola layoff plans

கரோனா பாதிப்பால் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்யும் விதமாக தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 1400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஓலா நிறுவனம் முடிவெடுத்துள்ளது. கரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ள சூழலில், சிறு நிறுவனங்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்து துறைகளைச் சார்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களும் இறங்கு முகத்தில் காணப்படுகின்றன. இந்த எதிர்ப்பாரா நிதி நெருக்கடி நிலையைச் சமாளிக்க நிறைய நிறுவனங்கள் சம்பள குறைப்பு மற்றும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 1400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஓலா நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

Advertisment

கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் 95 சதவீதம் வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக கூறும் ஓலா நிறுவனம், அதனை ஈடுகட்ட 1400 பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளது. மேலும், பணிநீக்கம் செய்யப்படும் பணியாளர்களுக்கு அறிவிப்பு காலத்திற்கான 3 மாத சம்பளம் வழங்கப்படுவதோடு, அவர்களின் மருத்துவக் காப்பீட்டுத் தொகை, விபத்துக் காப்பீட்டுத் தொகை மற்றும் பணியாளர்களின் பெற்றோருக்கான காப்பீட்டுத் தொகை (2 லட்சம் வரை) உள்ளிட்டவற்றை டிசம்பர் 31 ஆம் தேதி வரை தொடர முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓலா நிறுவனத்தின் போட்டியாளரான ஊபர் நிறுவனம் 5,400 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

corona virus Ola
இதையும் படியுங்கள்
Subscribe