மின்சாரகார்தயாரிப்பில் முன்னோடியாக உள்ள ஓலா நிறுவனத்தின் விற்பனை பெருமளவில்சரிந்துள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஓலா நிறுவனத்தின் மின்சார வாகனங்களில் விற்பனை சுமார் 20% வரை சரிந்துள்ளது.
மின்சார வாகனங்களில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துக்களால்,அவற்றைப்பொதுமக்கள் வாங்க ஆர்வம் காட்டாததால் விற்பனை சரிந்துவிட்டதாக ஓலா நிறுவனத்தினர் கூறுகின்றனர். ஆண்டுக்கு ஒரு கோடி வாகனங்களை விற்கத் திட்டமிட்டுள்ள அந்நிறுவனம், தற்போது நாளொன்றுக்கு 130 முதல் 200 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.