Officials who left the road; People carrying concrete

Advertisment

அதிகாரிகள் கான்கிரீட் சாலை போட்டு விட்டுச்சென்ற நிலையில், காயாமல் இருந்த கான்கிரீட் கலவையைஅந்தப் பகுதி மக்களே மண்வெட்டியால் வெட்டி வீட்டுக்கு எடுத்துச் சென்ற சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலம் ஜகானாபாத் மாவட்டத்தில் ஆடந்திகா என்னும் கிராமத்தில் கான்கிரீட் சிமெண்ட் சாலை ஒன்று அமைக்கப்பட்டது. அதிகாரிகள் மேற்பார்வையில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் சாலை அமைத்து விட்டுச் சென்ற பின்னர் அந்தப் பகுதி மக்கள் சிலர் வீட்டில் இருந்த மண்வெட்டி மற்றும் கலவை சட்டி ஆகியவற்றை எடுத்து வந்து காயாமல் இருந்த கான்கிரீட்டை வெட்டி வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். தற்போது இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.