Skip to main content

4 மாநிலம்... 1700 கிலோ மீட்டர் தூரம்... ஒற்றை மிதிவண்டி - வீடு வந்த சேர்ந்த இளைஞர்!

Published on 14/04/2020 | Edited on 14/04/2020

கரோனா தொற்று உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் சூழ்நிலையில், உலகின் பல்வேறு நாடுகள் செய்வதறியாது தவித்து வருகின்றது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு, வேகமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் ஒரு நீட்சியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூலி தொழிலாளி ஒருவர் 1700 கிலோ மீட்டர் சைக்கிள் மிதித்து தனது சொந்த ஊர் சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


  ஈஊஉ


ஒடிசாவை சேர்ந்தவர் மகேஷ் ஜீனா. இவர் மராட்டியத்தில் உள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில் புணிபுரிந்து வந்தார். ஊரடங்கு காரணமாக தான் வேலை பார்த்து வந்த தொழிற்சாலை மூடப்பட்ட காரணத்தாலும், கையில் பணம் இல்லாத காரணத்தாலும் தனது சொந்த ஊருக்கு செல்ல அவர் முடிவெடுத்துள்ளார். ஆனால், ஒடிசாவுக்கு செல்ல வாகன வசதி இல்லாத காரணத்தால் என்ன செய்வது என்று யோசித்துள்ளார். போய் சேர வேண்டிய கட்டாயம் உள்ளதால் தன்னுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டே போகலாம் என்ற முடிவுக்கு வந்த அவர் ஒரு வார காலம் பயணித்து தனது சொந்த ஊர் வந்து சேர்ந்தார். ஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்கள் வழியாக அவர் தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்