ADVERTISEMENT

ரூ.1,500 உதவித்தொகைக்காக 100 வயது தாயைக் கட்டிலோடு சாலையில் இழுத்துச் சென்ற மகள்...

12:12 PM Jun 15, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT


ரூ.1,500 உதவித்தொகையைப் பெறப் பயனாளர் நேரடியாக வர வேண்டும் என வங்கி ஊழியர்கள் தெரிவித்ததால், பெண் ஒருவர் தனது 100 வயதான தாயைக் கட்டிலில் போட்டு, சாலையில் இழுத்துக்கொண்டே வங்கிக்குச் சென்ற சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது.

ADVERTISEMENT


ஒடிசாவின் நோபடா மாவட்டம், பாரகன் கிராமத்தைச் சேர்ந்தவர் லாபே பாகெல். நூறு வயதாகும் இந்தப் பெண், முதுமை காரணமாகப் படுத்த படுக்கையாக உள்ளார். இந்தச் சூழலில், கரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த திட்டத்தின்படி, இவரது ஜன் தன் வங்கிக் கணக்கில் மத்திய அரசு வரவு வைத்த 1,500 ரூபாயைப் பெறுவதற்கு இவரது மகள் முயன்றுள்ளார். ஆனால், பயனாளர் நேரில் வந்தால் மட்டுமே பணத்தைக் கொடுக்க முடியும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வேறு வழி இல்லாத அவரது 70 வயதான மகள், 100 வயதான தனது தாயைக் கட்டிலுடன் வங்கிக்கு இழுத்துச் சென்றுள்ளார். உதவிக்கு வேறு யாரும் முன்வராத சூழலில், சுமார் 500 மீட்டர் தூரம் தனது தாயைக் கட்டிலுடன் இழுத்துக்கொண்டு வங்கிக்குச் சென்றுள்ளார் அவரது மகள். வங்கிக்குச் சென்ற இவர்களின் நிலைமையை நேரில் பார்த்த வங்கி அதிகாரி அஜித் பரதன், உடனடியாக ரூ.1,500 பணத்தை இவர்களுக்கு வழங்கியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT