Skip to main content

ஒடிசா ரயில் விபத்து; ரயில்வே அமைச்சக அறிக்கை வெளியீடு

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

Odisha train incident Ministry of Railways report release

 

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பாகநாகா பஜார் ரயில் நிலையம் அருகே ஜூன் 2 ஆம் தேதி சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய பெரும் விபத்து நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தத் துயர சம்பவத்தில் 291 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரைத்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அதே சமயம் இந்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலும் விசாரணை நடந்தது. அந்த விசாரணை அறிக்கையில், பாகநாகாவில் நடைபெற்ற ரயில் விபத்துக்கு மனிதத் தவறே முக்கியக் காரணமாகும். மேலும் தவறாக சிக்னல் கொடுத்ததன் விளைவாகத் தான் இந்த விபத்து நடந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருந்தது. மேலும் இந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை செய்து வந்த நிலையில், மூன்று பேரை சிபிஐ கைது செய்தது.

 

இந்நிலையில், இந்த ரயில் விபத்து குறித்து ரயில்வே அமைச்சகம் முதல் முறையாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வடக்கு கூம்டி ரயில் நிலையத்தில் சிக்னல் மாற்றும் கருவியில் ஏற்பட்ட கோளாறால் விபத்து நேரிட்டதாகவும், எலக்ட்ரிக் லிப்டில் பேரியரை மாற்றும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாடும் இந்த விபத்துக்குக் காரணமாக அமைந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை திறப்பு!

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Puri Jagannath temple treasure room opening

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை மற்றும் தொலைந்து போனதாகச் சொல்லப்படும் அதன் சாவி குறித்த விவகாரங்களை பாஜக கையில் எடுத்திருந்தது. இது தொடர்பாக ஒடிசாவில் முன்பு ஆட்சி செய்த பிஜு ஜனதா தள கட்சிக்கு எதிராக பாஜக தீவிரமாகப் பரப்புரை செய்தது. இந்த சட்டமன்ற தேர்தலில் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும் கடந்த 1978 ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது வரை பொக்கிஷ அறை திறக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் 46 ஆண்டுகளுக்குப் பின் இன்று (14.07.2024) பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையை மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து பூரி மாவட்ட ஆட்சியர் உள்பட 11 பேர் கொண்ட குழுவினர் பொக்கிஷ அறைக்குச் சென்று ஆய்வு செய்தனர். அதே சமயம் பொக்கிஷ அறையில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி நாளை (15.07.2024) தொடங்க உள்ளது. முன்னதாக பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கீடு செய்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் ராத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

பிஜு ஜனதா தளம் கட்சியின் அதிரடி அறிவிப்பு; பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ள அடுத்த சிக்கல்?

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Biju Janata Dal Action Announcement to BJP's next problem?

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில், ஒடிசா மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி முதல் முறையாக பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. 

முதல்வராக பொறுப்பு வகித்து வந்த பிஜு பட்நாயக் மறைவுக்கு பிறகு, அவருடைய மகன் நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கினார். பின்பு கடந்த 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் அமோக வெற்றி பெற்று அம்மாநில முதல்வரானார். அதனைத் தொடர்ந்து, ஐந்து தேர்தல்களில் வெற்றி பெற்று 24 ஆண்டுகளாக முதல்வராக பணியாற்றி வந்த நவீன் பட்நாயக், மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார். 

அதன்படி, மொத்தம் 147 இடங்களில்  78 இடங்களிலும் பா.ஜ.க கைப்பற்றி முதல்முறையாக ஆட்சியை பிடித்தது. பிஜு ஜனதா தளம் 51 இடங்களையும், காங்கிரஸ் 14 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடங்களிலும், சுயேட்சை 1 இடங்களிலும் வென்றது. அதே போல், மொத்தம் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் வெற்றி பெற்றியிருந்தது. பிஜு ஜனதா தளம் ஒரு தொகுதியைக் கூட பெற முடியாமல் படுதோல்வியடைந்துள்ளது. இந்த நிலையில், பா.ஜ.கவுக்கு எங்களின் ஆதரவு இல்லை என்று அறிவிப்பை நவீன் படநாயக்கின் பிஜு ஜனதா தளம் அறிவித்துள்ளது. 

கடந்த 2000, 2004ஆம் ஆண்டுகளில் பா.ஜ.கவோடு பிஜு ஜனதா தளம் கட்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது வெற்றி பெற்றது. கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவை, சட்டமன்றத் தேர்தலின் போது பிஜு ஜனதா, பா.ஜ.க கூட்டணி உடைந்தது. இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரச்சனையின் அடிப்படையில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவை பிஜு ஜனதா தளம் கடைபிடித்து வந்தது. 

Biju Janata Dal Action Announcement to BJP's next problem?

இதனிடையே, நடைபெற்று முடிந்த தேர்தலில் பிஜு ஜனதா தளம் படுதோல்வியடைந்துள்ளது. இந்த நிலையில், தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டை பிஜு ஜனதா தளம் எடுத்துள்ளது. இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது, ‘நாடாளுமன்றத்தில் இனி பா.ஜ.கவுக்கு எங்களின் ஆதரவு இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை. இனி நாங்கள் எதிர்கட்சி மட்டுமே’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.