Advertisment

தலைமறைவான சிக்னல் இன்ஜினியர்; சிபிஐ அதிர்ச்சி

nn

கடந்த 2 ஆம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில்பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய பெரும் விபத்து நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரைத்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

இந்தவிபத்து தொடர்பாக பல்வேறு ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், சிக்னலை கவனிக்கும் ரயில் நிலைய சிக்னல் இன்ஜினியர் வீட்டிற்கு விசாரணை செய்யச் சென்றனர். அங்கிருந்த சிக்னல் இன்ஜினியரிடம் சிபிஐ அதிகாரிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். திடீரென ஒருநாள் அந்த இன்ஜினியர் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.

Advertisment

ரயில் இயக்கங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியேசிக்னல் இன்ஜினியரிங் பணியாகும். சர்க்யூட்டுகள், சிக்னல்கள், இன்டர்லாக் சிஸ்டம் உள்ளிட்ட உபகரணங்களை நிறுவுவது மற்றும் அவற்றை பராமரிப்பது, பாழடைந்தால் அவற்றை மாற்றுவது உள்ளிட்ட பணிகள் சிக்னல் இன்ஜினியரிங் பணிகள் ஆகும். இந்தநிலையில் திடீரென அவர் குடும்பத்துடன் தலைமறைவானது சிபிஐ அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe