odisha

Advertisment

ஒடிசாவைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும், அதே மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவருக்கும் இந்த ஆண்டுஜூலை மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இருவரும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு செங்கல் சூளைக்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.

அப்போது அந்த 17 வயது சிறுவன், ராஜஸ்தான் மாநிலத்தின் பாரன் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது முதியவரிடம்தனது மனைவியை 1.8 லட்ச ரூபாய்க்கு விற்றுள்ளான். பின்னர் அந்தப் பணத்தை சாப்பிடுவதற்காக செலவிட்ட அந்தச் சிறுவன், தனக்கென்று ஒரு ஸ்மார்ட்ஃபோனும் வாங்கியுள்ளான்.

அதன்பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பிய அந்த சிறுவன், தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளான். ஆனால் இதனை நம்பாத பெண்ணின் குடும்பத்தார், இதுதொடர்பாக ஒடிசா காவல்துறையிடம் புகாரளித்தனர். இதனையடுத்துகாவல்துறையினர் அந்தச் சிறுவனிடம் விசாரித்துள்ளனர்.

Advertisment

அப்போது அந்தச் சிறுவன், தனது மனைவியை விற்றுவிட்டதாக தெரிவித்துள்ளான். இதனையடுத்து ஒடிசா காவல்துறையினர், பெண்ணை மீட்க ராஜஸ்தானின்பாரன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு விரைந்தனர். ஆனால் அங்குள்ள உள்ளூர் மக்கள், பெண்ணிற்காக முதியவர் 1.8 லட்சம் அளித்திருப்பதாக கூறி பெண்ணைத் திரும்ப அழைத்துச் செல்ல விடாமல் தடுத்துள்ளனர். இருப்பினும் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு ஒடிசா காவல்துறையினர் பெண்ணை மீட்டு வீட்டிற்குஅழைத்து வந்துள்ளனர்.

17 வயது சிறுவன், தற்போது கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.