கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பிரத்தியேகமாக 1000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை ஒன்றை ஒடிசா அரசு கட்ட உள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை சர்வதேச அளவில் 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ள சூழலில், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 14 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் முதன்முறையாக கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக 1000 படுக்கைகள் கொண்ட பிரத்தியேக மருத்துவமனை ஒன்றை உருவாக்க ஒடிசா அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த பிரத்தியேக மருத்துவமனையானது இரண்டு வாரங்களில் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று ஒடிசா அரசு, மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையே கையெழுத்தானது.