Skip to main content

"ரயில் விபத்து குறித்த உண்மை வெளிவர வேண்டும்" - மே.வங்க முதல்வர் மம்தா

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

odisha rail incident truth came out west bengal cm mamata benarji

 

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து உலக அளவில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் பல்வேறு கட்டங்களாக மீட்புப் பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது சிபிஐ விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

இந்த ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களை சந்திக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

 

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, "ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ஒடிசா அரசும் மேற்கு வங்க அரசு இணைந்து செயல்படுகின்றன. விபத்தில் சிக்கியவர்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்தில் சிக்கி இறந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 103 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 97 பேர் சிகிச்சையில் உள்ளனர். 31 பேரை காணவில்லை. நிறைய பேர் இறந்துள்ளனர். இந்த விபத்து பற்றிய உண்மை வெளிவர வேண்டும். நாம் மக்களுக்காக உழைக்க வேண்டும். நாம் மக்களுடன் இருக்க வேண்டும். இந்த ரயில் விபத்து குறித்த உண்மை வெளிவர வேண்டும். விபத்து பற்றிய உண்மையை மறைக்கக் கூடாது" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

பிஜு ஜனதா தளத்தில் இணைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.கே.பாண்டியன்!

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

Former IAS officer VK Pandian joined the Biju Janata Party

 

கடந்த 2000 ஆம் ஆண்டு ஒடிசா கேடரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்ற தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியன் அம்மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்தின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்பு ஒடிசாவில் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றிய வி.கே.பாண்டியன். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்து வந்தார். ஒடிசா அரசாங்கத்திலும், ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள நிர்வாகிகள் மத்தியிலும் நவீன் பட்நாயக்கிற்கு அடுத்த இடத்தில் வி.கே பாண்டியன் மிகுந்த செல்வாக்கு உள்ள நபராக பார்க்கப்பட்டார்.

 

இந்த சூழலில் தான் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி (20.10.2023) வி.கே.பாண்டியன் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 23 தேதி அவரது விருப்ப ஓய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், அதற்கு மறுநாள் (24.10.2023) ஒடிசா மாநிலத்தின் கேபினெட் அமைச்சர் பதவிக்கு இணையான பதவியில் வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக ஒடிசா தலைமைச் செயலாளர் வெளியிட்டிருந்த உத்தரவில், “மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின் தலைவராக வி.கே.பாண்டியன் நியமிக்கப்படுகிறார். இவர் இனி, முதல்வருக்கு கீழ் நேரடியாக பணியாற்றுவார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் விருப்ப ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டியன் ஒடிசா  மாநில முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்துள்ளார். பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்த பிறகு, “முதல்வரின் வழிகாட்டுதலுடனும், கட்சித் தலைவர்களின் ஒத்துழைப்புடனும், மாநில மக்களுக்காக தன்னலமின்றி நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், பணிவுடன் பாடுபடுவேன்” என்று வி.கே.பாண்டியன் கூறியுள்ளார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

West Bengal Kulti Railway Station fire incident

 

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

மேற்கு வங்க மாநிலம் பாஸ்கிம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள அசன்சோலில் என்ற பகுதியில் குல்டி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ரயில் நிலையத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையத்தில் தளவாட பொருட்கள் வைத்திருந்த இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்