Advertisment

ஒடிசா ரயில் விபத்து; ரயில்வே பொது மேலாளர் பணி நீக்கம்

odisha rail incident south east railway general manager dismissed

ஒடிசா ரயில் விபத்து காரணமாகத்தென்கிழக்கு ரயில்வே பொது மேலாளர்பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே ஜூன் 2 ஆம் தேதி சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய பெரும் விபத்து நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவத்தில் 291 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரைத்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

மேலும் இந்த விபத்து தொடர்பாக பல்வேறு ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், தென்கிழக்கு ரயில்வே பொது மேலாளர் அர்ச்சனாஜோஷிபணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தென் கிழக்கு ரயில்வேயின் புதிய மேலாளராக அணில்குமார் மிஸ்ரா என்பவர் நியமிக்கப்பட உள்ளார். ரயில் விபத்து நடைபெற்று ஒரு மாத காலத்திற்குப்பிறகு அர்ச்சனாஜோஷி மீது ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

railway dismissed
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe