/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/class-art.jpg)
ஒடிசா மாநிலத்தில் கடந்த 2 ஆம் தேதி இரவு இரண்டு பயணிகள் இரயில் மற்றும் ஒரு சரக்கு இரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துநாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட மீட்பு படையினர் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குஅனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு அருகில் இருந்தபஹனகாபள்ளியிலும்தற்காலிகமாக பிணவறையைஅமைத்தனர். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இங்கு வைக்கப்பட்டன.
இதையடுத்து துயரமான இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். இந்த விபத்திற்குப் பொறுப்பேற்று இந்திய ரயில்வே துறை அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரை செய்தது. இதையடுத்து ரயில் விபத்து குறித்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துசிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் ரயில் விபத்தில் 288 பேர் இறந்துள்ளதாக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரயில் விபத்தில் இறந்தவர்களின் தற்காலிகப் பிணவறையாக பாலசோரில் உள்ள பஹனகா பள்ளி மாற்றப்பட்டதை தொடர்ந்து தற்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பதயக்கம் காட்டி வருகின்றனர். அதனால் பள்ளி கட்டடத்தின் சில பகுதிகள் இடிக்கப்படுகின்றன. மேலும் இது குறித்துபள்ளி ஆசிரியர் ஒருவர் தெரிவிக்கையில், "மாவட்ட ஆட்சியர் நேற்று பள்ளி கட்டடத்தை பார்வையிட்டார். இங்கு பயப்பட ஒன்றுமில்லை. இறந்தவர்களின் ஆவிகள் இல்லை. இது வெறும் மூட நம்பிக்கை. இந்த கட்டடம் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)