ADVERTISEMENT

ஊரடங்கை மீறினால் அவ்வளவுதான்... பாராட்டைப் பெறும் போலீஸாரின் பலே ஐடியா...

11:53 AM May 11, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றும் மக்களைப் பயமுறுத்த ஒடிசா மாநில கிராமங்களில் பெண்களைப் பேய்களாக வேடமணிய வைத்து வீதிகளில் அலைய வைத்திருக்கிறார்கள் போலீஸார்.


இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,152 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,206 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் 20,917 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்குநாள் இந்தியாவில் காரோண பரவல் அதிகரித்து வரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் மக்கள் இந்த உத்தரவை மதிக்காமல் வெளியே சுற்றுவதால், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கில் மக்கள் வெளியே சுற்றுவதைக் கட்டுப்படுத்த ஒடிசா போலீஸார் மேற்கொண்டுள்ள ஒரு திட்டம் நல்ல பலனை அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒடிசாவில் ஒரு கிராமப்பகுதியில் உள்ள போலீஸாருடன் இணைந்து கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்த சிலரும் திட்டமிட்டு, பெண் ஒருவருக்குப் பேய் போல வேடமிட்டு வீதிகளில் உலா வரவைக்கின்றனர். மேலும், வீட்டை விட்டு வெளியேறுபவர்களையும் இந்த பேய் பின்தொடர்ந்து பயமுறுத்துகிறது. மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது எனினும் இந்தத் திட்டம் நன்கு வேலை செய்வதாக அப்பகுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தப் 'புடவை அணிந்த பெண்' மக்கள் வீட்டில் தங்குவதை உறுதி செய்வதற்காக இரவு முழுவதும் சுற்றித் திரிகிறார்கள் எனவும், இதனால் யாரும் வெளியே வருவதில்லை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT