புதிய திருத்தியமைக்கப்பட்ட போக்குவரத்து விதிகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன.

odisha mla fined for breaking traffic rules

Advertisment

Advertisment

குறைந்தபட்ச அபராத தொகை ரூ.100 ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைக்கு பிறகு நாட்டிலேயே அதிகபட்சமாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவருக்கு 86,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல இதுவரை அதிக அபராதம் விதித்த மாநிலங்கள் பட்டியலிலும் ஒடிசா மாநிலமே முதலிடத்தில் உள்ளது. இதுவரை சுமார் 88 லட்ச ரூபாய் வரை அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், புவனேஷ்வர் மத்திய சட்டமன்றத் தொகுதி ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வான அனந்த நாராயண் ஜேனா, போக்குவரத்து விதிமுறைகளை மீறி நோ பார்க்கிங் பகுதியில் வாகனத்தை நிறுத்தியதாக அபராதம் போடப்பட்டுள்ளது. புவனேஷ்வர் காவல் துணை ஆணையர் அனுப் சஹோ, எம்.எல்.ஏ அனந்த நாராயணுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து, அதற்கான கட்டண ரசீதை வழங்கினார்.