Skip to main content

அமைச்சரை சுட்டுக்கொன்ற விவகாரம்; கொலையாளி மனைவியின் தகவலால் பரபரப்பு!

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

Odisha Ministerial Affairs; Information of the wife of the offender

 

காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த நிலையில், காவலர் குறித்து அவரது மனைவி கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஒடிசாவின் பிரஜ்ராஜ் நகர் என்ற பகுதிக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்று கொண்டிருந்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸை உதவி சார்பு ஆய்வாளர் கோபால் தாஸ் என்பவர் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அமைச்சர் நபாதாஸின் நெஞ்சுப்பகுதியில் தோட்டாக்கள் பாய்ந்தன.

 

இதில் படுகாயமடைந்த அமைச்சர் நபா தாஸ் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட காவலர் கோபால் தாஸ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்த அமைச்சர் நபா தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிகழ்வு அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் நபா தாஸிற்கு இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறனர்.

 

இந்நிலையில், அமைச்சரை சுட்ட காவலர் கோபால் தாஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரின் மனைவி தெரிவித்துள்ளார். இது குறித்து காவலரின் மனைவி ஜெயந்தி கூறியது, “என்ன நடந்தது எனத் தெரியவில்லை. இப்படி ஒன்று நடந்தது என்பதை செய்தித்தாள் மூலமாகத்தான் அறிந்தேன். எனக்கு எப்படித் தெரியும். நான் வீட்டில் இருக்கிறேன். அவர் எங்களிடம் வீடியோ காலில் பேசிய பின் நான் அவருடன் பேசவில்லை. அவர் மனநலப் பிரச்சனையால் கடந்த 7 முதல் 8 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். மருந்துகளை உட்கொண்ட பிறகு அவர் சாதாரணமாக நடந்து கொள்வார். அவர் கடைசியாக 5 மாதங்களுக்கு முன்புதான் வீட்டில் இருந்தார்” எனக் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாதயாத்திரை விபத்தில் பலியான 5 பேர்; நிவாரணத் தொகையை வழங்க அமைச்சர்கள்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
5 lose their live in padayatra accident; Ministers to provide relief amount

சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற போது விபத்தில் பலியான 5 பக்தர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்லாக்கோட்டை ஊராட்சி கண்ணுகுடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் சமயபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை தஞ்சை மாவட்டம் வளப்பக்குடி கிராமம் அருகே நடந்து சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கண்ணுகுடிப்பட்டி என்கிற ஒரே கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி (60), ராணி (37), மோகனாம்பாள் (27), மீனா (26), தனலட்சுமி (36) ஆகிய 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இவர்களுடன் நடந்து சென்ற சங்கீதா படுகாயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்புச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூ.2 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா ஆகியோர் கண்ணுக்குடிப்பட்டி கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறி முதலமைச்சரின் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினர். நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story

காமராஜர் பிறந்த மாவட்டத்திலும் காலை உணவுத் திட்ட தொடக்க விழா! அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024

 

உலகிற்கே முன்னோடி திட்டமாக அமைந்துள்ளதாகக் கூறப்படும்  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை,  பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில், திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்திலுள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தினை விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், கல்லூரணி எஸ்.பி.கே. தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு துவங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்தினார்.

பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்ததினத்தை முன்னிட்டு, விருதுநகர் மதுரை சாலையிலுள்ள காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில், அன்னாரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும், தக்கம் தென்னரசுவும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,   விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ராஜபாளையம் தொகுதியிலும் தளவாய்புரம் ஊராட்சி பு.மூ.மா.அம்மையப்ப நாடார் ஆரம்பப் பள்ளி மற்றும் கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராஜர் இந்து நாடார் தொடக்கப்பள்ளி போன்ற பள்ளிகளில், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் தொடங்கிவைத்து, குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவைச் சாப்பிட்டார். ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாகர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்திலும் அவருடைய பிறந்தநாள் விழா மற்றும் காலை உணவுத்திட்டத்தின் தொடக்க விழாவை சிறப்புடன் நடத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ. போன்ற மக்கள் பிரதிநிதிகள் கர்மவீரருக்கு புகழ் சேர்த்துள்ளனர்.