விவசாயப் பிரச்சனைக்காக சட்டமன்ற உறுப்பினர் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் ஆட்சியில் உள்ளது. இந்தநிலையில்அம்மாநில சட்டமன்றத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரின்இரண்டாவது கூட்டம் நேற்று (12.03.2021) தொடங்கியது. அவை தொடங்கியபோதே காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் நெல் கொள்முதல் தொடர்பான பிரச்சனையைக் கிளப்பினார்.
இதன்பிறகு ஒடிசாவின் உணவு விநியோகத்துறைஅமைச்சர், நெல்கொள்முதல் சம்மந்தமாக அறிக்கையை வாசித்தார். அப்போதுதியோகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்சுபாஷ் சந்திர பனிகிராஹிசானிடைசரைக் குடிக்கமுயன்றார். அப்போது அருகிலிருந்த சக உறுப்பினர்கள் அவரைதடுத்து நிறுத்தினர். ஏற்கனவே அவர் நெல்கொள்முதல் பிரச்சனை தொடர்பாக தற்கொலை செய்துகொள்வேன்என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சானிடைசரைக் குடித்துதற்கொலைக்கு முயன்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர், இந்த சம்பவம் குறித்து கூறுகையில், “எனது தொகுதியில் நெல்கொள்முதல்செய்யப்படவில்லை. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குவிண்டால் நெல் விற்கப்படாமல் உள்ளது. அரசின் கவனத்தை ஈர்க்கவேதற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன்.” எனக் கூறியுள்ளார்.