Advertisment

'ஆங்கிலத்தில் புலமை... கோயில் வாசலில் பிச்சை' ஒடிசாவில் நடந்த மனதை உருக்கும் சம்பவம்!

ஒடிசா மாநிலத்தில் முன்னாள் டிஎஸ்பி-யின் மகன் ஒருவர் கோயில் வளாகத்தில் பிச்சையெடுத்த சம்பவம் அம்மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள ஜெகன்னாதர் கோயிலில் பிச்சை எடுப்பவர் சங்கர் மிஸ்ரா. இவர் வழக்கமாக பிச்சை எடுக்கும் இடத்தில் ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் தன்னுடைய வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனால் கோபமான சங்கர் மிஸ்ரா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பில் முடிந்ததுள்ளது.

Advertisment

jh

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தரவே, இருவரையும் காவல் நிலையத்திற்கு போலிசார் அழைத்து சென்றனர். விசாரணையின் முடிவில் ஆட்டோ ஓட்டுநர் தான் முதலில் அடிதடியில் ஈடுபட்டார் என்பதை கண்டறிந்த போலிசார், பிச்சைக்காரரிடம் புகார் எழுதி தரச் சொன்னார்கள். எழுதி தெரியுமா என்று காவல் துறையினர் கேட்டு முடிப்பதற்குள், அருகில் இருந்த பேப்பரை எடுத்து ஆங்கிலத்தில் சரமாரியாக ஓட்டுநர் மீது புகார் எழுதி தந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலிசார் அவர் குறித்து விசாரித்ததில் அவர் முன்னாள் டிஎஸ்பி ஒருவரின் மகன் என்றும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனநிலை பாதிப்புக்கு உள்ளானதால் அவர் பிச்சை எடுப்பதாகவும் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அவரை அருகில் இருந்த காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

Beggar
இதையும் படியுங்கள்
Subscribe