Advertisment

பெண் அதிகாரி மீது ஆவேசம்; நிலக்கடலை வியாபாரிகள் போராட்டத்தில் பரபரப்பு

Obsession with female officer; Groundnut traders stir in struggle

டெல்லியில் மாபெரும் பேரணிக்கு விவசாயிகள் திட்டமிட்டு வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல தெலுங்கானாவில் விவசாயிகள் போராட்டத்தில் பெண் அதிகாரியை பொதுமக்கள் ஆவேசமாகத்தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் வேளாண் விளைபொருள் சந்தையில் நிலக்கடலை வியாபாரிகள், நிலக்கடலை விற்பனைக்காக வந்திருந்தனர். அப்பொழுது நிலக்கடலை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் அதிகாரிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டுகுறைந்த விலைக்குவாங்கிச் செல்வதாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது விவசாய விளைபொருள் விற்பனை மையத்தின் பெண் அதிகாரியை விவசாயிகள் உடையைப் பிடித்து இழுத்துச் சென்றனர். விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வேர்க்கடலை மீது அவரை அமர வைத்து, அவர் தலையில் வேர்க்கடலையை அள்ளிக் கொட்டி ஆவேசப்பட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாகப் பரவி வருகிறது.

Advertisment
Farmers struggle telangana
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe