குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அங்கிருந்த பின்னூட்ட குறிப்பேட்டில், "இந்த அற்புதமான பயணத்திற்காக, எனது சிறந்த நண்பர் மோடிக்கு நன்றி" என எழுதியிருந்தார். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியா வந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா, காந்தி குறித்து எழுதிய வாசகம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் விதமாக ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த இரண்டு நாட்கள் பயணத்தில் ட்ரம்ப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். இன்று நண்பகல் அகமதாபாத் வந்த ட்ரம்ப் அங்குள்ள சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார். இதன் பின்னர், அங்கிருக்கும் பார்வையாளர்கள் குறிப்பேட்டில், "இந்த அற்புதமான பயணத்திற்காக, எனது சிறந்த நண்பர் மோடிக்கு நன்றி" எந்த எழுதி கையெழுத்திட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்த அப்போதைய அதிபரான ஒபாமா, சபர்மதி ஆசிரமத்தின் குறிப்பேட்டில், "காந்தியின் உணர்வு இந்தியாவில் இன்றும் உயிருடன் இருக்கிறது. எல்லா தேசங்கள் மற்றும் எல்லா மக்களிடையேயும் நாம் எப்போதும் அன்பு மற்றும் அமைதியின் உணர்வைப் பகிர்ந்துகொண்டு வாழ்வோம்" என எழுதியுள்ளார். அவரது அந்த வாசகம் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.