/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/lulu_1.jpg)
கேரளா வரலாறு காணாத கனமழையால் பல்வேறு சேதங்களை சந்தித்து வருகிறது. சேதங்களில் இருந்து மீண்டுவர பல தரப்புமக்கள் நிவாரண பொருட்கள் மற்றும் நிதிகள் கொடுத்துவருகின்றனர். அதேபோல மனிதாபிமானம் அற்றுசிலர் கேரளாவுக்கு நிதி கொடுப்பதை கேலிசெய்து வருகின்றனர்.
கேரளவைச் சேர்ந்த ராகுல் சேரு என்பவர் ஓமனில் லுளு குழுமத்தில் கேஷியராக பணியாற்றிவந்தார். இவர் சமூக வலைதளத்தில் கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அளிப்பதை கேலி செய்ததால், இவர் வேலை பார்க்கும் நிறுவனம் இவரை உடனடியாக வேலையை விட்டு வெளியேற்றியுள்ளது.
கேரளாவில் நடக்கும் வெள்ளநிலவரத்தை சமூக ஊடகங்களில் உங்கள் மிகவும் உணர்ச்சியற்ற மற்றும் அவமானகரமான கருத்துக்கள் காரணமாக, உடனடியாக நீங்கள் வேலையை விட்டு வெளியேற்றப்படுகிறீர் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த லுளு குழுமத்தின் உரிமையாளர் யூசப் இவரும் கேரளாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)