/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adjdjddj.jpg)
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வருபவர்எஸ்.ஏ.போப்டே. இவரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இதனையடுத்து எஸ்.ஏ.போப்டே, அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா என்பவரைசமீபத்தில் பரிந்துரைத்தார்.
இந்தநிலையில்உச்சநீதிமன்றதலைமை நீதிபதியாக என்.வி. ரமணாவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நியமித்துள்ளார். அவர் வரும் 24 ஆம் தேதி முதல் உச்சநீதிமன்றதலைமை நீதிபதியாக பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வரும் ஏப்ரல் 24 முதல்,அடுத்த ஒரு வருடம்நான்கு மாதங்களுக்கு (ஆகஸ்ட் 26,2022 வரை) என்.வி. ரமணா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றுவர்என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)