நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினருமான நஸ்ரத் ஜஹான் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை உட்கொண்டதால்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

Advertisment

nusrat jahan

தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட நஸ்ரத் நேற்று மாலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இதுபற்றி நுஷ்ரத்தின் குடும்பத்தினர் கூறும்போது, “அவருக்கு ஆஸ்த்துமா பிரச்னை ஏற்கெனவே இருக்கிறது. ஞாயிற்றுக் கிழமை சுவாசப் பிரச்னை தீவிரமானதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது அவர் நலமாக இருக்கிறார். அவர் பற்றி வரும் வதந்திகளை நம்பவேண்டாம். அவர் தூக்க மாத்திரை ஏதும் சாப்பிடவில்லை” என்று தெரிவித்தனர்.

நஸ்ரத்துக்கு சமீபத்தில்தான் அவரின் காதலரும் தொழிலதிபருமான நிகில் ஜெயினுடன் கடந்த ஜூன் மாதம் துருக்கியில் திருமணம் செய்துகொண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெயின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது நஸ்ரத்துக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் உடனடியாக அன்றிரவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.