ADVERTISEMENT

1.29 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி - சுகாதாரத்துறை அமைச்சகம்!

10:55 PM Mar 01, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT



2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, 'உருமாறிய' கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் பல நாடுகள், முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT


இந்நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த 53 நாட்களில் 1.29 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், முதல் டோஸ் 1.13 கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்து.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT