Published on 28/01/2021 | Edited on 28/01/2021

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 10 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் இந்தியாவில் உருமாறிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உருமாறிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி அறையில் சிகிச்சையளிப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஐ.சி.எம்.ஆர் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் நடத்திய ஆய்வில், கோவாக்சின் தடுப்பூசி புதிய வகை கரோனாவிற்கு எதிராகவும் செயல்படும் எனத் தெரியவந்துள்ளது.